190. அருள்மிகு புண்ணியகோடிநாதர் கோயில்
இறைவன் புண்ணியகோடிநாதர்
இறைவி அபிராமி
தீர்த்தம் புண்ணியகோடி தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருவிடைவாய், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருவிடைவாசல் சிவன் கோயில்' அல்லது 'அத்திக்கடை சிவன் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் சுமார் 13 கி.மீ. தொலைவு சென்று வலதுபுறம் செல்லும் பாலக்குடி மெயின் ரோட்டில் திரும்பி சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம். கொரடாச்சேரியிலிருந்து சுமார் 3 கி.மீ.
தலச்சிறப்பு

சிவனின் வாகனமான நந்தி தேவர் வந்து வழிபட்ட தலமாதலால் 'விடைவாய்' என்ற பெயர் பெற்றது. 'விடை' என்றால் 'நந்தி' என்ற பொருளும் உண்டு. விடையவன் என்னும் அரசன் கட்டியதால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

மூலவர் 'புண்ணியகோடிநாதர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'அபிராமியம்மை' என்னும் திருநாமத்துடன், பெரிய திருவுருவத்துடன் காட்சி அளிக்கின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜப் பெருமான், கஜலட்சுமி, பால சாஸ்தா, நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

நந்தி தேவர், ஆதிசேஷன், அகத்தியர், அத்திரி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com